சென்னை தாழங்குப்பம், உலகநாதபுரம் பகுதிகளில் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால், சாலைகளில் நடக்க இயலவில்லை என கூறி பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு கனரக வாகனங்கள் வராது என உறுதியளிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று அப்பகுதியில் நடந்து சென்ற அருள்தாஸ் என்பவர், லாரியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.