4 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை... வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை
உதகை அருகே 4 வயது சிறுமையை தாக்கி கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது.
கடந்த 10-ந்தேதி அரக்காடு கிராமத்தின் அருகே வடமாநில தொழிலாளியின் 4 வயது மகள் சரிதா விளையாடி கொண்டிருந்த போது சிறுத்தை இழுத்து சென்றது. அதில் படுகாயமடைந்த சிறுமி உயிரிழந்தார்.
அதனையடுத்து 10-க்கும் மேற்பட்ட நவீன கேமராக்கள் வைக்கபட்டு கண்காணித்ததுடன் அதனை பிடிக்க 2 கூண்டுகளை நேற்று வைத்தனர்.
அதில் ஒரு கூண்டில் சிறுத்தை சிக்கிய நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.