பின்னால் வந்து மோதிய அதிவேக கார்... தூக்கிவீசப்பட்ட நபர் துடிதுடித்து பலி... உள்ளே இருந்த 4 பெண்கள்
மைசூர் மாவட்டம் எச்.டி. கோட்டை பகுதியை சேர்ந்த பிரசன்னா குமார், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். விடியற்காலை வேளையில், ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் உணவு டெலிவரி செய்ய தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த கார் மீது மோதியதில், சுமார் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், மதுபோதையில் தனது 4 தோழிகளுடன் காரில் வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், விபத்தை ஏற்படுத்திய நபர் விநாயக் என தெரியவந்ததை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.