டிராக்டரை முந்திய அரசு பஸ்ஸால் 3 வண்டிகள் அடுத்தடுத்து மோதி விபத்து - 8 பேருக்கு நேர்ந்த கதி.. விழுப்புரத்தில் அதிர்ச்சி

Update: 2023-04-20 10:41 GMT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, அரசு நகரப் பேருந்து உள்பட மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில், எட்டு பேர் காயமடைந்தனர்.

பெரும்பூண்டி கிராமத்தில் நெல் மூட்டைகளை ஏற்றிய டிராக்டர், செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் நோக்கி சென்றது. விழுப்புரம் - ஆற்காடு நெடுஞ்சாலையில் சென்ற போது, பின்னால் வந்த அரசு நகரப் பேருந்து டிராக்டர் மீது மோதிய நிலையில், அரசுப் பேருந்து பின்புறம் டாட்டா ஏசி வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், பேருந்தில் பயணித்த இருவர், டிராக்டரில் வந்த ஆறு பேர் என, மொத்தம் எட்டு பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் சென்றதால், விழுப்புரம் - ஆற்காடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்