பெண் கொடூரமான முறையில் கொலை - காதலை முறித்துக் கொண்டதால் காதலன் வெறிச்செயல்

Update: 2022-10-23 16:24 GMT

கண்ணூர் மாவட்டம் கூத்துபறம்பு அருகே உள்ள பானூர் பகுதியை சேர்ந்த் விஷ்ணு பிரியா என்ற பெண்ணும், ஷியாம்ஜித் என்ற இளைஞரும், கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஷியாம்ஜித் உடனான காதலை விஷ்ணு பிரியா திடீரென முறித்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஷியாம்ஜித், வீட்டில் தனியாக இருந்த விஷ்ணு பிரியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, விஷ்ணு பிரியாவின் தலையில் சுத்தியால் அடித்தும், உடலில் 18 இடங்களில் கத்தியால் வெட்டியும், அதனைத் தொடர்ந்து பின் கழுத்தை அறுத்தும் கொடூரமாக செய்துள்ளார். வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய குடும்பத்தினர், விஷ்ணுபிரியா கொடூரமான முறையில் கொலை செய்திருப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், தலைமறைவாக இருந்த காதலன் ஷியாம்ஜித்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்