கள்ளக்குறிச்சியில் தனது திருமணத்திற்காக நண்பர்கள் கொடுத்த பரிசைக் கண்டு மணமகன் கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது... கோட்டைமேட்டைச் சேர்ந்த அறிவழகனுக்கு மதி என்ற பெண்ணுடன் கடந்த 13ம் தேதி திருமணம் நடந்தது... வரவேற்பு நிகழ்வின் போது, அறிவழகனுடைய தந்தையின் புகைப்படம் பொருந்திய பேனரை அவரது நண்பர்கள் பரிசாக வழங்கினர்... தந்தையை இழந்து வாடிய அறிவழகன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை... கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிய நண்பர்களை அவர் கட்டி அணைத்துக் கொண்டார்... திருமணத்திற்கு தந்தையே நேரில் வந்து பாராட்டியதாய் நினைத்து அகமகிழ்ந்த அறிவழகன் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தார்