கஸ்டமர் நாயிடமிருந்து உயிரை காப்பாற்றும் முயற்சியில் உயிரையே விட்ட டெலிவரி பாய்

Update: 2023-05-24 06:35 GMT

ஆன்லைன் யுகத்தில் குண்டூசி முதல் முதல் பெரிய பெரிய வீட்டு உபயோக பொருட்கள் வரை அனைத்தும் நாம் இருக்கும் இடத்தில் இருந்தே பெரும், வசதி வந்துவிட்டது...

சமைக்க பயன்படும் உணவு பொருட்கள் முதல் சமைத்த உணவு வரை செல்போனில் ஆர்டர் செய்தால் போதும் டிங் டாங் என்று அடுத்த அரை மணி நேரத்திற்குள் வீட்டிற்கே வந்து விடுகிறது...

படித்த இளைஞர்கள், திருமணமான பெண்கள், கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் முழு நேர, பகுதி நேர வேலையாக டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்...

இந்நிலையில் டெலிவரி செய்யும் நபர்கள் சில நேரங்களில் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்...

ஹைதராபாத் பஞ்சாவடி பகுதியில் amazon இல் ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்ய 30 வயது இளைஞரான மொஹமத் இல்லியாஸ் சென்றிருக்கிறார்...

ஆர்டர் செய்த நபர் வருவதற்கு முன் அவர் வீட்டில் வளர்த்த டாபர் மன் நாய் குறைத்துக் கொண்டே வந்திருக்கிறது...

டெலிவரி செய்யும் நபரை பார்த்ததும் அவர் மேல் ஆக்ரோஷமாக பாய வந்த சமயத்தில் பயத்தில் தன்னை காப்பாற்றி கொள்ள நினைத்த மொஹமத் இல்லியாஸ் எதிர்பாராத விதமாக வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளார்...

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிக்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ipc 289 n கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

மேலும் டெலிவரி ஊழியர்கள் சங்க மேலாளர் படுகாயமடைந்த ஊழியரின் மருத்துவ செலவை நாயின் உரிமையாளரே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார் ..

இதே போன்றே உணவு டெலிவரி செய்ய சென்ற 23 வயது இளைஞர் வீட்டின் வளர்ப்பு நாய் தாக்க முயன்றதில் 3 வது மாடியில்.இருந்து குத்திததில் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் கடந்த ஜனவரியில் நடைப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது...

டெலிவரி செய்யும் நபர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்பதே ஊழியர்கள் வைக்கக் கூடிய கோரிக்கையாக உள்ளது ..

இருந்த இடத்தில் இருந்து பொருட்களை பெரும் நாமும் அவர்களுடைய பாதுகாப்பில் அக்கறை கொள்வதும் ஆகச் சிறந்தது...

Tags:    

மேலும் செய்திகள்