கதற கதற இரு குழந்தைகளை கிணற்றில் வீசிய கொடூர தந்தை... கேட்போரை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்...
கேரளாவில் இரு குழந்தைகளுடன் தந்தை ஒருவர் கிணற்றில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூரிலுள்ள கய்பமங்கலத்தை சேர்ந்தவர் ஷிஹாப். மாற்றுத்திறனாளியான இவர் டைல்ஸ் கடை நடத்தி வரும் நிலையில், இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திடிரென இரு குழந்தைகளையும் கிணற்றில் வீசி, தானும் கிணற்றில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பகத்தினர் குழந்தைகள் உட்பட மூவரையும் மீட்டதில், ஷிஹாப்பை சடலாமாக மீட்டுள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.