திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இருசக்கர வாகனத்தை தவறுதலாக இயக்கிய சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை சாயப்பட்டறை பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், தனது
6 வயது மகன் ராகுலுடன், அருகில் உள்ள ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, லட்சுமணன் இரு சக்கர வாகனத்தை சாலை ஒரத்தில் நிறுத்திய போது, முன் பகுதியில் நின்றிருந்த சிறுவன் ராகுல் ஆக்ஸிலேட்டரை திருகியதையடுத்து, இரு சக்கர வாகனம் சாலையின் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.