75வது சுதந்திர தின கொண்டாட்டம்.....அணிவகுப்பு நடத்திய மியான்மர் ராணுவம்
மியான்மர் நாட்டின் 75வது சுதந்திர தினம் தலைநகர் நய்பிடாவில் கொண்டாடப்பட்டது... மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது... இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சுதந்திர தின அணிவகுப்பை நடத்தியுள்ளது மியான்மர் ராணுவம்... மியான்மரின் ராணுவ ஆட்சிக்குழு தலைவர் மின் ஆங் ஹ்லைங், சில நாடுகள் தங்கள் நாட்டின் விவகாரங்களில் தலையிட முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். அதே நேரத்தில் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் ஒத்துழைப்புக்கு அவர் நன்றி தெரிவித்தார்.