Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-02-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-02-07 00:52 GMT

துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை 3,400 ஐ தாண்டியது....மீட்பு பணிகள் தீவிரம்...

துருக்கியில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக, இந்தியாவில் இருந்து பேரிடர் மீட்பு படைகள் பயணம்..நிவாரண பொருட்கள் உட்பட அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவிப்பு...

டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைப்பு...3 பேர் கொண்ட குழு விரைவில் ஆய்வுப்பணிகளை தொடங்க உள்ளதாக அறிவிப்பு...

அறுவடைக்கு தயாரான நிலையில், 33 சதவீதம் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் இழப்பீடு...அமைச்சர்களின் ஆய்வு முடிந்த 24 மணி நேரத்தில் நிவாரணம் அறிவித்தார், முதலமைச்சர் ஸ்டாலின்... 

ஈரோடு இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் பெறுவதற்கான படிவங்களில் கையெழுத்திட, அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம்...தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம்... 

இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை வழங்கிய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு, ஈ.பி.எஸ் தரப்புக்கு கிடைத்த முதல் வெற்றி...டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய, அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மகிழ்ச்சி...

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று மனுத் தாக்கல் செய்கிறார்....இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, இதுவரை 59 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்....

ஈரோடு இடைத் தேர்தலில் இருந்து விலகுகிறார், ஓ.பி.எஸ் வேட்பாளர் செந்தில் முருகன்...இரட்டை இலை வெற்றி பெற வேண்டும் என்பதே நோக்கம் என விளக்கம்.. 

மதுரை மக்கள் செங்கல் ஏந்தும் முன் எய்ம்ஸ் பணிகளை தொடங்குங்கள்....மத்திய அரசுக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்....

பட்டியல் இனத்தவருக்கான திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.....அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு....

கடலில் பேனா சிலைக்குப் பதில் கட்டுமரம் வைக்கலாம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து...கட்டு மரமாக மிதப்பேன் என்று கருணாநிதி கூறுவார் எனவும் விளக்கம்...

உயர் நீதிமன்ற நீதிபதிகளாக விக்டோரியா கவுரி உட்பட 5 பேர் இன்று காலை பதவியேற்கின்றனர்...விக்டோரியா கவுரி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது...

தமிழகத்தில் உள்ள 425 பொறியியல் கல்லூரிகளில் 200 கல்லூரிகள் மட்டுமே தரமானவையாக இருப்பதாக தகவல்...அடிப்படை வசதிகள் இல்லாத கல்லூரிகளை வரும் கல்வி ஆண்டில் மூடுவதற்கு அண்ணா பல்கலைக் கழகம் திட்டம்...

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கு தள்ளுபடி.....மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்கள் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு....

பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தினால் இந்தியா பங்கேற்காது என அறிவிப்பு...இந்திய கிரிக்கெட் அணி மீது ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் மியான் தத் வலியுறுத்தல்...

Tags:    

மேலும் செய்திகள்