Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30-01-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-01-30 00:54 GMT

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்...எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை... 

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு..ஈ.பி.எஸ் மேல் முறையீடு செய்வதால், முக்கிய வழக்கில் விரைவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கும் என தகவல்...

மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா, நாம் தமிழர் கட்சியில் சேர விரும்பியதாக சீமான் புதிய தகவல்...ஈரோடு இடைத் தேர்தலுக்காக 12 நாட்கள் தங்கி இருந்து பிரசாரம் செய்யப்போவதாகவும் அறிவிப்பு...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டி...கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு... 

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியது திமுக அரசு...ஈரோடு இடைத்தேர்தலில், எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என தமாக தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி... 

முதியோர் காப்பகத்தை திறந்து வைத்து பேட்மிண்டன் விளையாடிய ஈ.பி.எஸ்...சேலம் அருகே கட்சியினர் உற்சாகம்...

ஈரோடு இடைத் தேர்தலில் அண்ணாமலை எடுக்கும் முடிவே, பாஜகவின் முடிவு..பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் தகவல்...

தமிழகத்தில் 2026ஆம் ஆண்டில் பாமக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை..அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல், அரை இறுதிப் போட்டி எனவும் கருத்து...

கன்னியாகுமரியில் தொடங்கிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை, காஷ்மீரில் இன்று நிறைவடைகிறது....நிறைவு விழாவில் பங்கேற்க 21 எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு... 

புதிய கல்விக் கொள்கையால் மட்டுமே இந்தியாவின் இலக்கை அடைய முடியும்....அறியாமையால் சிலர் எதிர்த்து வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு..... 

சென்னையில் நாளை முதல் ஜி 20 கல்வியாளர்கள் மாநாடு துவக்கம்...வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள்...

Tags:    

மேலும் செய்திகள்