இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவில் மாணவிகளுக்கு ஆறு மாத கால மகப்பேறு விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளன, கேரள பல்கலைக்கழகங்கள்.
அண்மையில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை என அசத்தலான அறிவிப்பை வெளியிட்டிருந்த கேரள பல்கலைக்கழகங்கள் தான் தான் இந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளன. இதன் மூலம் கேரளாவில் இனி 18 வயதுக்கு மேல் உள்ள மாணவிகள் மகப்பேறு விடுமுறை எடுத்து கொள்ளலாம். இதற்கு முன்பு கேரள உயர் கல்வித்துறை, அனைத்து பல்கலைக்கழகங்களிலும்18 வயதுக்கு மேல் உள்ள மாணவிகளுக்கு 60 நாள் மகப்பேறு விடுமுறை வழங்கி வந்தது. இந்நிலையில், பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக கேரள அரசு எடுத்து வரும் அடுத்தடுத்த முன்னெடுப்புகள் பல்வேறு தரப்பினரின் பாராட்டுதலுக்கு காரணமாகியுள்ளது.