26 நிமிடத்தில் 48 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (30.04.2023)

Update: 2023-04-30 04:32 GMT

நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில், மருத்துவ சுற்றுலா மாநாட்டினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை தொடங்கி வைத்தார். சவுதி அரேபியா, மொரீஷியஸ் உட்பட 20 நாடுகளில் இருந்து 70-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு துறைகளில் சிறந்த மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், அயலக தூதரக அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஆருத்ரா விவகாரத்தில் தன் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாகவும், இதற்காக தி.மு.க முன்னாள் எம்.பி. ஆர்.எஸ்.பாரதி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் மான நஷ்ட ஈடாக, 500 கோடியே ஒரு ரூபாய் வழங்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும், வழக்கறிஞர் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரணாசியில், காசி தெலுங்கு சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி, காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். கங்கை நதியின் மானசரோவர் காட் பகுதியில் நடைபெற்ற இந்த ஒரு நாள் நிகழ்ச்சி, வாரணாசிக்கும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவுக்கும் இடையே உள்ள பழங்கால நாகரீக உறவுகளை, எடுத்துக்காட்டும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வை, காணொளி வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தெலுங்கு மக்களை காசி ஏற்றுக் கொண்டது போல், தெலுங்கு மக்களும் காசியை தங்கள் இதயத்தில் வைத்திருப்பதாக கூறினார். மேலும், இதயங்கள் அருகருகே இருக்கும்போது தூரம் ஒரு பொருட்டல்ல என்றும் அவர் கூறினார். ஒட்டு மொத்த இந்தியாவும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக காசி தமிழ் சங்கமம், சௌராஷ்ட்ரா தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜாதி, மதம் ஆகியவற்றின் பெயரால் காங்கிரஸ் கட்சி சமூகத்தை பிளவுபடுத்தி வருகிறது என்று கர்நாடக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ஹம்னாபாத், விஜயபுரா ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசினார், அப்போது, பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பெண்கள் என அனைவருக்கும் முன்னுரிமை கொடுக்கும் கட்சி பாஜகதான் என்று மோடி குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, ஏழ்மையை அகற்றுவோம் என்பது வெற்று முழக்கமாக மட்டுமே இருந்தது என மோடி விமர்சித்தார்,.

Tags:    

மேலும் செய்திகள்