24 நிமிடத்தில் 48 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (22.07.2023)

Update: 2023-07-22 04:28 GMT

தமிழகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணி இன்று தொடங்கப்பட உள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்கள், ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்று குறிப்பெடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், வாக்காளரின் பெயர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருப்பது தெரியவந்தால், அவருடைய ஒப்புதலை பெற்ற பிறகே அந்தப் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வும் தொடங்குகிறது. வழக்கமாக 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்படும் நிலையில், இந்த ஆண்டு 3 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 3-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது


கர்நாடக மக்களின் குடிநீர் தேவையை தாண்டி அணையில் மீதம் உள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுவோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகவாத் உடனான அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு குறித்து பேசிய அவர், அடுத்து ஓரிரு நாட்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இரு மாநிலங்களுக்கும் தேவையான தண்ணீரும் கிடைக்கும் என்பதை நம்புவோம் என்றும் கூறியுள்ளார்.


ஆளுநர் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது என அமைச்சர் பொன்முடி பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை கிண்டியில் நடைபெற்ற துணைவேந்தர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, மாநிலத்தில் என்ன சூழ்நிலை நிலவுகிறதோ அதற்கு ஏற்றார் போல தான் துணைவேந்தர்கள் செயல்பட முடியும் என தெரிவித்துள்ளார். வருமானம் இல்லாத கல்லூரிகளை அரசு எடுத்துக் கொள்ள வேண்டுமா? என கேள்வி எழுப்பிதாக, உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்