20 நிமிடத்தில் 45 செய்திகள் | காலை தந்தி எக்ஸ்பிரஸ் | Speed News | Thanthi News (27.06.2023)
டாஸ்மாக் மதுக் கடைகளில், பில் வழங்கும் நடவடிக்கை விரைவில் தொடங்கப்பட உள்ளது. டாஸ்மாக் விற்பனையை கணினி மயமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, பொதுத்துறை நிறுவனமான ரெயில் டெல்லுக்கு டாஸ்மாக் நிறுவனம், ரூ.294 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம், 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் கணினி மயமாக்கப்படவுள்ளன. இதன் மூலமாக, மதுபானங்கள் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும். கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வது தடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தமிழக அரசு தனி சட்டம் இயற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்த வேண்டும் என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். நடராஜர் கோயில், வன்முறை கூடாரமாக மாறுவதாக அவர் தெரிவித்தார். காசி விசுவநாதர் கோயிலை சட்டம் இயற்றி அரசு எடுத்துள்ளது, இமாச்சலில் 12 கோயிலை அரசு கையகப்படுத்தியுள்ளது. இதே போல், நடராஜர் கோயிலுக்கும் சட்டம் இயற்றி கையகப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்...
பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை மாநகராட்சி அனுமதிக்காத இடத்தில் பலியிடுவதற்கு தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. திருச்சியில், மாநகராட்சி அனுமதிக்காத இடத்தில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடைசி நேரத்தில் மனுத் தாக்கல் செய்தால் எவ்வாறு தடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பி, தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
வாக்னர் குழு போராளிகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரஷ்ய அதிபர் புதின், பெரும் ரத்த சேதங்களை தவிர்க்க உதவியதற்காக, வாக்னர் குழுவுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் வாக்னர் குழு போராளிகள் விரும்பினால் பெலாரஸ் நாட்டுக்கு செல்லாம் என்றும், அல்லது பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு, வீடு திரும்பலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.