ஒரே நாளில் 33 பேர்...அதிரடி காட்டும் தமிழக போலீஸ் - இனி தமிழகத்தில் முடியாது..

Update: 2023-05-18 10:32 GMT

திருவாரூர் மாவட்டத்தில், சாராய விற்பனை தொடர்பாக, ஒரே நாளில் 33 பேர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக சாராய விற்பனை செய்யப்படுவது குறித்து, திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதில், நேற்று ஒரே நாளில் 33 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஆயிரத்து 200 லிட்டர் சாராயம், 140 வெளி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன்படி, கடந்த நான்கு நாட்களில், மொத்தம் 163 பேர் கைது செய்யப்பட்டு, நான்காயிரத்து 200 லிட்டர் சாராயம், 400 வெளி மாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்