கண்மாயில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் - நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்
கண்மாயில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் - நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கண்மாயில் குளிக்க சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
குன்னத்துப்பட்டியைச் சேர்ந்த முத்து, கிரித்திக், தனலட்சுமி ஆகிய மூன்று சிறுவர்களும், அதே பகுதியில் உள்ள கண்மாயில் குளிக்கச் சென்றனர். அப்போது, அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில், மூன்று சிறுவர்களும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
த்து- உயிரிழந்த சிறுமி
கிரித்திக்- உயிரிழந்த சிறுவன்
தனலெட்சுமி-உயிரிழந்த சிறுமி