பவானி அருகே சி.எம் நகர் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு, சித்தோடு காவல் ஆய்வாளர் ரவி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுபோதையில் இருந்த 2 இளைஞர்கள் தாக்கியதில் காயமடைந்த காவல் ஆய்வாளரும், உதவி ஆய்வாளரும், சக போலீசாரால் மீட்கப்பட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் மற்றும் கோபால் என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். போலீசாருடன் இருவரும் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.