தேங்கி நிற்கும் மழைநீர் மிதக்கும் மருத்துவமனை தத்தளிக்கும் நோயாளிகள்

Update: 2024-11-01 13:06 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் நேற்று முதல் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.இந்த நிலையில் 2வது நாளாக ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுப்பாளையம், பட்டணம், முத்துக்காளிப்பட்டி,காக்காவேரி,அத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழையானது அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. கனமழையின் காரணமாக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளி பிரிவு,பிரசவ வார்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வழிகளில் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மழை நீரில் சிரமத்திற்கு உள்ளாகி சென்றனர். மேலும் உள்நோயாளி பிரிவுகளில் உள்ள நோயாளிகளை மழையின் முன்னெச்சரிக்கை காரணமாக நோயாளிகளை மாற்று பகுதிக்கு மருத்துவமனை நிர்வாகம் அழைத்துச் சென்று தங்க வைத்த நிலையில் தற்போது உள்நோயாளி பிரிவுகளில் அனைத்து படுகைகளும் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. மேலும் பழைய பேருந்து நிலையம் அருகே சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீர் செல்வதால் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்ட முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் தற்போது பெய்த கனமழையால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியது குறிப்பிடத்தக்கது....

Tags:    

மேலும் செய்திகள்