சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் - 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Update: 2023-05-04 11:15 GMT

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாரமுல்லா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து, பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி மற்றும் தோட்டா மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்