மண்வெட்டியால் பெண்ணின் தலையில் பலமாக தாக்கிய 2 பேர் - திருவண்ணாமலையில் அதிர்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, வழி தகராறில் மண் வெட்டியால் பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆரணி அருகே கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் என்பவருக்கும், பிரகாஷ் என்பவருக்கும் இடையே, வழி சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், திடீரென அதே வழியில் தனது வீட்டின் அருகே, பிரகாஷ் மண் கொட்டி சீர்படுத்தியபோது, அதனை குமரவேல் மனைவி நதியா தட்டிக் கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த பிரகாஷ் மற்றும் அவரது மகன் டேனியல்ராஜ் ஆகியோர் சேர்ந்து, மண் வெட்டியால் நதியாவின் தலையில் பலமாக அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.