மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.01.2023)

Update: 2023-01-25 07:52 GMT

குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னையில் 6,800 போலீசார் பாதுகாப்பு...சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்....

வாழும் கலை அமைப்பு நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் சென்ற ஹெலிகாப்டர் பனிமூட்டம் காரணமாக அவசரமாக தரையிறக்கம்...சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் தரையிறங்கியதால் பரபரப்பு....

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு திருமாவளவன் சமூக நீதி குறித்து பேசக்கூடாது....நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்...

ஆளுநர் உரையின்போது அவரது விருந்தினர் செல்போனில் படம் பிடித்ததாக உரிமை மீறல் புகார்...சட்டப்பேரவை உரிமைக்குழு ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், இனிகோ இருதயராஜ், ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் பங்கேற்பு....

சென்னையில் மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.....மொழி காக்க இன்னுயிர் நீத்தவர்களின் உருவ படங்களுக்கு வீரவணக்கம்...

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடைவிதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து.....சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

குடியரசுத் தினத்தன்று ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு....தமிழ்நாடு ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துவதாக விமர்சனம்...

ஓபிஎஸ் உடன் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்திப்பு.....ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவளிப்பதாக பேட்டி...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை விரைவில் அறிவிப்பதாக ஓபிஎஸ் பேட்டி...இணக்கமான கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு...மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்