மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.12.2022)

Update: 2022-12-16 07:57 GMT

நரிக்குறவ சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு......

சென்னை மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க தடை கோரி வழக்கு.....மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.....

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு தேதி மீண்டும் மாற்றம்.....ஜனவரி 19 மற்றும் 20ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு......

நீட் விவகாரத்தில், மத்திய அரசு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் .....

சென்னை மெரினாவில் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகள் பாதை, மழைக்காலம் முடிந்தபின் சீரமைக்கப்படும்....மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு....

ஆவின் நெய் விலை, லிட்டருக்கு 50 ரூபாய் உயர்வு.....580 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் நெய் 630 ரூபாய்க்கு விற்பனை.....

ஆவின் நெய் விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்....ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும் எனவும் கருத்து....

வீடு ஜப்தி செய்த விவகாரத்தில் தனியார் நிதி நிறுவனத்தினர் மீது மதுவந்தி பரபரப்பு புகார்.....தமக்கு தெரியாமலே பொருட்களை எடுத்து வைத்து வீட்டை விற்றுள்ளதாக குற்றச்சாட்டு.... 

கோவிந்தவாடி ஆழ்வார் கோவில் விவகாரத்தில் உரிய விளக்கம் பெறப்படும்.....கோவிலை காணோம் என்ற பொன்.மாணிக்கவேலின் புகாருக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம்.....

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவின் வெற்றியை நினைவு கூர்ந்து கொண்டாட்டம்.....டெல்லி தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை......

Tags:    

மேலும் செய்திகள்