நாட்டை உலுக்கிய மருத்துவ மாணவி கொலை... அமைச்சர் ஜே.பி. நட்டா வெளியிட்ட பரபரப்பு வீடியோ
மேற்கு வங்க மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி. நட்டா குற்றஞாட்டியுள்ளார்...
மேற்கு வங்க மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து இந்திய மருத்துவ அமைப்பின் பிரதிநிதிகள் மத்திய சுகாதார துறை அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி. நட்டாவை சந்தித்து முறையிட்டனர். அதன்பேரில், காணொளி ஒன்றை ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ளார். அதில், இச்சம்பவத்தை மறைக்கும் முயற்சியில் மாநில அரசு முயல்வதாக தெரிவித்துள்ளார். மேலும், சட்ட ஒழுங்கே இல்லாத மாநிலமாக மேற்கு வங்கம் மாறி வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.