`அமெரிக்க அதிபர் தேர்தல்' அனல் பறந்த கமலா ஹாரிஸின் இறுதிக்கட்ட பிரசாரம்
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியது... ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், வாஷிங்டனில் நடைபெற்ற மிகப் பெரிய பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் உரையாற்றினார்... அப்போது கடந்த முறை ட்ரம்ப் தோற்றபோது நாடாளுமன்றத் தாக்குதலில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டதை நினைவுகூர்ந்த கமலா, ட்ரம்ப் நிலையற்றவர், பழிவாங்கும் வெறி கொண்டவர் என்று கடுமையாக விமர்சித்தார்... தனக்கும் ட்ரம்ப்புக்கும் இடையிலான தேர்வு என்பது சுதந்திரத்திற்கும், பெருங்குழப்பத்திற்கும் இடையிலான தேர்வு என்று தெரிவித்தார். மேலும் ட்ரம்ப் ஏன் மீண்டும் வெல்லக்கூடாது என்பதற்கான காரணங்களை முன்வைத்தார்.