அதிபருக்கே சூனியம் வைத்த பெண் அமைச்சர்? - அதிரும் மாலத்தீவு
மாலத்தீவில் அதிபருக்கு எதிராக சூனியம் வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் அமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாலத்தீவின் சுற்றுச்சூழல் அமைச்சர் பாத்திமா ஷம்னாஸ் அலி சலீம், அதிபர் முகமது முய்ஸுவுக்கு சூனியம் வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஷம்னாஸுடன், அதிபர் அலுவலகத்தில் பணியாற்றிய அவரது முன்னாள் கணவர் ஆடம் ரமீஸ் மற்றும் மேலும் இருவர் சூனியம் வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து ஷம்னாஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்... இச்சம்பவம் மாலத்தீவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...