மக்களை கொன்று குவித்த கனமழை... சுனாமி போல் தாக்கும் வெள்ளம் - மிதக்கும் வீடுகள்.. தவிக்கும் மக்கள்
மக்களை கொன்று குவித்த கனமழை... சுனாமி போல் தாக்கும் வெள்ளம் - மிதக்கும் வீடுகள்.. தவிக்கும் மக்கள்
சிலி நாட்டின் மெளலே நகரில், தொடர் கனமழையால் சுமார் 34 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மத்திய தெற்கு சிலியில் பல நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் நீர் சூழ்ந்தது. ஓ ஹிக்கின்ஸ் பகுதியில் பேரழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அதிபர் கேப்ரியல், மெளலே பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதுவரை மெளலேவிலிருந்து 34 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், 26 ஆயிரம் பேர் வெள்ளப்பகுதிகளில் சிக்கி தவிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.