அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஹமாஸ்... கடவுளாக கண்முன் வந்த `கழுதைகள்' - தெறித்து விழுந்த ரத்தம்
எரிபொருள் இல்லாத சூழலில் காசா மக்களின் கடைசி வாகனமாக கழுதை வண்டி மாறியிருப்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு
இஸ்ரேல் போரால் சிதைந்து கிடக்கும் காசாவில்... மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமால் அல்லல்படுகிறார்கள்...
இஸ்ரேல் ஒருபுறம் தாக்குதல் நடத்த.. காசா மக்கள் உயிர்தப்பிக்க பாதுகாப்பான இடம் நோக்கி ஓடி வருகிறார்கள்.
இப்படி செல்வோருக்கு இப்போது கழுதை வண்டியே உதவி வருகிறது.
ஆம்... எரிபொருள் இல்லாது வாகனங்களை இயக்க முடியாத சூழல் நிலவுகிறது அங்கு...
உதவிப்பொருட்கள் காசாவுக்கு செல்ல அனுமதி அளிக்கும் இஸ்ரேல் ராணுவம்... எரிபொருள் செல்வதற்கு அனுமதியே இல்லை என திட்டவட்டமாக சொல்கிறது. மருத்துவமனைகளில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் எரிபொருளை திருடுவதாகவும் சொல்கிறது இஸ்ரேல் ராணுவம்..
உள்ளே செல்லும் எரிபொருட்கள்... ஹமாசின் தாக்குதல் திறனை வலுவாக்கும் என இஸ்ரேல் ராணுவம் பார்க்கிறது...
எந்த எரிபொருளும் இல்லாத சூழலில்... கழுதையே உதவுகிறது என்கிறார்கள் காசா மக்கள்.
அஸ்மா அபு, மருத்துவமனை ஆய்வக இயக்குனர்
இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்க... சிதைந்து விழும் கட்டிடங்களில் சிக்கியவர்களை உள்ளூர் மக்கள் கண்ணீரோடு மீட்டு வருகிறார்கள்... இப்படி காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் கழுதை வண்டிகளையே மக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
உயிரிழந்தவர்கள் சடலங்களை எடுத்துச் செல்லவும் அவர்களுக்கு கழுதை வண்டியே உதவுகிறது
காசா முழுவதும் கழுதை... குதிரை வாகனங்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. விலங்குகளுக்கும் உணவு தட்டுப்பாடு இருப்பதாக சொல்லும் அவர்கள் இப்படியே போனால்... அவைகளும் கடுமையாக பாதிக்கப்படும் என்கிறார்கள்...