ரொட்டிக்கு காத்திருந்த குழந்தைகள்.. சடலமாக திரும்பிய 15 ஐநா ஊழியர்கள் - உலகை உலுக்கிய போர் படுகொலை

Update: 2023-10-28 06:57 GMT

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 481 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரை காசா முழுவதிலும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 7 ஆயிரத்து 28ஆக அதிகரித்துள்ளது... அவர்களில் 66 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாலஸ்தீன விவகாரங்களுக்கான ஐநா ஆணையர் ஜெனரல் பிலிப் லாஸரினி இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் இதுவரை தங்கள் அமைப்பைச் சேர்ந்த 57 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்... அதிலும் ஒரே நாளில் 15 ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் கவலை தெரிவித்தார். 2 தினங்களுக்கு முன்பு தங்கள் ஊழியர் ஒருவர் காசாவில் போரால் இடம்பெயர்ந்த 6 குழந்தைகளை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து விட்டு ரொட்டித் துண்டுகள் வாங்க பேக்கரிக்கு சென்ற போது உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்...

Tags:    

மேலும் செய்திகள்