எதிர்பார்க்காத நேரத்தில் விழுந்த குண்டு.சிதறி கிடக்கும் உடல்கள்.பயத்தில் மக்கள்.கதி கலங்கிய இஸ்ரேல்

Update: 2023-10-08 05:44 GMT

ஹமாஸ் ராக்கெட் தாக்குதலால் இஸ்ரேலில் 100க்கும் மேற்பட்டோரும், இஸ்ரேல் ராணுவத்தின் பதில் தாக்குதலில் பாலஸ்தீனத்தில் 198 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலின் காசா நகருக்குள், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர், திடீரென எல்லையில் உள்ள இரும்பு தடுப்புகளை உடைத்தெறிந்து உள்ளே புகுந்து ராணுவ முகாம்களை தாக்கினர். அங்கிருந்த ராணுவ தளவாடங்களை கைப்பற்றியதோடு, காசா நகர் மீது சரமாரியாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதலை நடத்தினர். மேலும், பொதுமக்களையும் வீடுகளுக்குள்ளேயே சிறை பிடித்து தாக்குதலை தொடர்ந்தனர். இதையடுத்து, பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை, மழையாய் பொழிந்த‌து. பல இடங்களில் கட்ட‌டங்கள் சரிந்து விழுந்தன. இந்த தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதே நேரத்தில், பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் உட்பட 198 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்