பெங்களூரு டெஸ்ட் - நியூசிலாந்து அபார வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் இந்தியா 46 ரன்களும், நியூசிலாந்து 402 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக ஆடிய இந்தியா 462 ரன்கள் குவித்து, நியூசிலாந்துக்கு 107 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தொடர்ந்து பேட் செய்த நியூசிலாந்து 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் வில் யங் 48 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 39 ரன்களையும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது