அமெரிக்காவின் உள்ளே புகுந்த கண்கள்... மொத்தமும் அம்பலம்... வடகொரியா தந்த ஷாக்

Update: 2023-11-28 11:16 GMT

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களை வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது... சமீபத்தில் அந்நாடு நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது... அந்த செயற்கைக்கோள் அமெரிக்க மற்றும் தென்கொரிய ராணுவ செயல்பாடுகளை அறிந்து கொள்ள அனுப்பப்பட்டது... இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், அமெரிக்காவின் மேற்கு பசிபிக் பிராந்தியமான குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப்படை தளம், நோர்போக் கடற்படை தளம் ஆகியவற்றை அந்த உளவு செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து அனுப்பிய நிலையில், அதை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டார்...

Tags:    

மேலும் செய்திகள்