ஆம்வே நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்..! அமலாக்கத்துறை அதிரடி..! காரணம் என்ன?
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆம்வே நிறுவனம் உலகின் பல நாடுகளில் கிளை பரப்பி இயங்கி வருகிறது.
ஆம்வே நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்..! அமலாக்கத்துறை அதிரடி..! காரணம் என்ன?
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆம்வே நிறுவனம் உலகின் பல நாடுகளில் கிளை பரப்பி இயங்கி வருகிறது. அமெரிக்க வழி விற்பனை என்பதன் சுருக்கமாகவே ஆம்வே என்ற பெயரில் நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வந்தனர்.
அமெரிக்க வழி என்று சொல்லப்பட்டாலும் இந்த நிறுவனம் செயல்பட்டது எம்.எல்.எம் என்று அழைக்கப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற முறைப்படிதான். சங்கிலி அமைப்பில் உறுப்பினர்களை சேர்த்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்தால், லட்சாதிபதி ஆகலாம் என ஆசை காட்டி லட்சக்கணக்கானவர்களை தங்கள் நிறுவனத்தில் இணைத்திருக்கிறது ஆம்வே.
இந்த ஆசை வார்த்தையை நம்பி பொதுமக்கள் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்குவதால் பல நூறு கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக ஆந்திர மாநில சிஐடி போலீசார் கடந்த 2012ல் நடவடிக்கை எடுத்தனர். ஆம்வே நிறுவனத்தின் இந்திய சிஇஓ வில்லியம் பிங்கேனே மற்றும் இரண்டு இயக்குனர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத் துறையினர் சட்டவிரோத பணபரிமாற்றம் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது எம்எல்எம் என்ற பெயரில் மாபெரும் மோசடி நடந்திருப்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது..
ஒருவர் தனக்குக் கீழாக எத்தனை உறுப்பினர்களை சேர்க்கிறார் என்பதை வைத்து இவர்கள் தங்களின் 5 லட்சத்துக்கும் மேலான உறுப்பினர்களை சில்வர், கோல்ட், பிளாட்டினம், டைமண்ட் என தரம் பிரித்திருந்தனர்.
இதில் முதல் நிலை உறுப்பினர்கள், சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல, கோடிக்கணக்கான கமிஷன் தொகையை தாங்கள் சம்பாதித்ததாக கூறி கூட்டங்கள் நடத்தி பொதுமக்களுக்கு ஆசை காட்டி வந்துள்ளனர்.
பிரீத்
இது ஒரு புறமிருக்க, இவர்களின் தயாரிப்புகள் தரமற்றவையாக இருந்ததும் தெரியவந்த நிலையில் வணிக நிறுவனமாக பதிவு செய்து கொண்ட ஆம்வே, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் அடிப்படையில் ஆம்வே இந்தியா நிறுவனத்தின் 758 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
முடக்கப்பட்ட சொத்துக்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் தொழிற்சாலை, இயந்திரங்கள், வாகனங்கள், நிலங்கள் மற்றும் வங்கி வைப்புத் தொகை உள்ளிட்டவை அடங்கும். 412 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள், மேலும் 346 கோடி மதிப்புள்ள வங்கி இருப்பு என நிறுவனத்திற்கு சொந்தமான 36 வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ள ஆம்வே நிறுவனம், அதிகாரிகள் மற்றும் அரசு துறைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் உள்ளதால் நிறுவனம் சார்பாக கருத்து கூறவிரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.