அத்துமீறி நுழைந்த ஈரான் படகு சிறைபிடிப்பு - போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை

இந்திய கடல் எல்லை பகுதிக்குள், அத்துமீறி நுழைந்த ஈரான் நாட்டை சேர்ந்த படகில், 2வது நாளாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர்.

Update: 2022-04-10 16:29 GMT
இந்திய கடல் எல்லை பகுதிக்குள், அத்துமீறி நுழைந்த ஈரான் நாட்டை சேர்ந்த படகில், 2வது நாளாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர். இந்திய கடல் எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக ஈரான் நாட்டை சேர்ந்த படகு ஒன்றை, கடலோர காவல்படை அதிகாரிகள் சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். நேற்று ஒரு நாள் முழுவதும் படகில் சோதனை செய்த நிலையில், சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் சிக்கவில்லை. இந்நிலையில், 2வது நாளாக இன்றும் படகில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையிலும், போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் சிக்கவில்லை என மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, படகில் வந்த 11 பேரும் மீனவர்கள் என தெரிவித்துள்ள அதிகாரிகள், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிம் கார்டுகள் மற்றும் செல்போன்களை சோதனை செய்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்