வெளிநாடுகளில் படிக்கும் 11.33 லட்சம் இந்தியர்கள்...எங்கெங்கு எவ்வளவு பேர்?

உக்ரைனில் சிக்கியுள்ள 18,000 இந்திய மாணவர்களை மீட்கும் பணி நடந்து வரும் நிலையில், இந்திய மாணவர்கள் எந்தெந்த அயல் நாடுகளில் அதிகம் படிக்கிறார்கள் என்பதை இந்தத் தொகுப்பு அலசுகிறது...

Update: 2022-03-09 12:24 GMT
உக்ரைனில் சிக்கியுள்ள 18,000 இந்திய மாணவர்களை மீட்கும் பணி நடந்து வரும் நிலையில், இந்திய மாணவர்கள் எந்தெந்த அயல் நாடுகளில் அதிகம் படிக்கிறார்கள் என்பதை இந்தத் தொகுப்பு அலசுகிறது... மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன் மாநிலங்களவையில் தெரிவித்த தகவலின்படி, 2.19 லட்சம் இந்திய மாணவர்களை கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரகம், முதல் இடத்தில் உள்ளது. 2.15 லட்சம் இந்திய மாணவர்களை கொண்டுள்ள கனடா இரண்டாம் இடத்தில் உள்ளது. விசா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதன் காரணமாக முதல் இடத்தில் இருந்த அமெரிக்கா, 2.11 லட்சம் இந்திய மாணவர்களுடன் தற்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. 92,383 இந்திய மாணவர்களை கொண்டுள்ள ஆஸ்திரேலியா நான்காம் இடத்திலும், 80,800 இந்திய மாணவர்களுடன் சவுதி அரேபியா ஐந்தாம் இடத்திலும் உள்ளன. 55,465 இந்திய மாணவர்களை கொண்டுள்ள பிரிட்டன் ஆறாம் இடத்திலும், 43,600 இந்திய மாணவர்களுடன் ஓமன் ஏழாம் இடத்திலும் உள்ளன. எட்டாம் இடத்தில் உள்ள நியுசிலாந்தில் 30,000 இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். 18,000 இந்திய மாணவர்களுடன் ஒன்பதாம் இடத்தில் உக்ரைனும், 16,500 இந்திய மாணவர்களுடன் பத்தாம் இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக அடுத்த கல்வியாண்டில் பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பேயின் போன்ற நாடுகளுக்கு இந்திய மாணவர்கள் அதிக அளவில் செல்ல வாய்ப்புள்ளதாக துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்