சுமி நகரில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் வெளியேற்றம்

சுமி நகரில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் வெளியேற்றம்

Update: 2022-03-09 02:17 GMT
உக்ரைனின் சுமி நகரில் சிக்கி தவித்த 694 இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

தாக்குதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கி தவிக்கும் மக்கள் வெளியேற ஏதுவாக சுமி, கார்கிவ், கீவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்த‌து. 

மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியே  மனிதாபிமான வழித்தடத்தை ஏற்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. 

இந்த மனிதாபிமான வழித்தடம் இன்று முதல் நடைமுறைக்கு வந்த‌தை அடுத்து, சுமி பகுதியில் உள்ள மக்கள் பேருந்துகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

இதேபோல் சுமி நகரில் சிக்கி தவித்த  694 இந்திய மாணவர்களும் பேருந்துகள் மூலம் உக்ரைனில் உள்ள பொல்டாவா நகரத்திற்கு புறப்பட்டனர். இதன் மூலம் சுமி நகரில் சிக்கித்தவித்த அனைத்து இந்தியர்களும் மீட்கப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்