பிரதமர் மோடிக்கு ஏழு பக்க கடிதம்..தமிழ் அரசியல் உறுப்பினர்கள் சமர்ப்பிப்பு

இலங்கையில், புதிய அரசியல் தீர்வு உள்ளிட்ட தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழ் உறுப்பினர்கள் 7 பக்க கடிதத்தை எழுதியுள்ளனர்.

Update: 2022-01-21 13:18 GMT
இலங்கையில், புதிய அரசியல் தீர்வு உள்ளிட்ட தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழ் உறுப்பினர்கள் 7 பக்க கடிதத்தை எழுதியுள்ளனர்.இலங்கையில், புதிய அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான ஏழு பக்கக் கடிதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளால் இந்திய தூதர் கோபால் பாக்லேயிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்த வேண்டும், தமிழ் மக்களின் நிறைவேற்றப்படாத பல வாக்குறுதிகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த 7 பக்க கடிதத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் உள்ளிட்ட கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்