சூடானில் வலுக்கும் போராட்டம்
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது.
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது. சமீபத்தில், சூடானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவத்துக்கு எதிரான போராட்டங்களில், அங்கு இதுவரை 72 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், தலைநகர் கார்டமில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ராணுவ ஆட்சியைக் கண்டித்து பேரணியில் ஈடுபட்டனர். அப்போது ராணுவத்துக்கு எதிராக மக்கள் கோஷங்களை எழுப்பினர்.