பெருவில் புதிதாக 22 பேருக்கு ஒமிக்ரான் மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 71 ஆக அதிகரிப்பு

பெரு நாட்டில் 22 பேருக்கு புதிதாக ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Update: 2021-12-27 13:12 GMT
பெரு நாட்டில் 22 பேருக்கு புதிதாக ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் மொத்த ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் சுல்லானா நகரில் உள்ள பியூரா பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்நகரில் தொற்றுப்பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்