காபூலில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல்; "தீய, மனிதாபிமானமற்ற செயல்" - ஆஸ்திரேலிய பிரதமர் கண்டனம்

காபூலில் நடைபெற்ற தாக்குதலானது மிகவும் தீய மற்றும் மனிதாபிமானமற்ற செயல் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-27 09:13 GMT
காபூலில் நடைபெற்ற தாக்குதலானது மிகவும் தீய மற்றும் மனிதாபிமானமற்ற செயல் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையம் அருகே நிகழ்ந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர், தாக்குதலுக்கு முன்பாகவே காபூலில் இருந்து ஆஸ்திரேலிய படை வீரர்கள் வெளியேறி விட்டதாகத் தெரிவித்தார். மேலும், ஆஸ்திரேலியா இதுவரை 4 ஆயிரத்து 100 பேரை ஆப்கானில் இருந்து மீட்டுள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் உதவியின்றி இது நடந்திருக்காது என்றும் அவர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்