அபுதாபியில் ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி; "மனிதாபிமான அடிப்படையில் ஏற்று கொண்டோம்" - ஐக்கிய அரபு அமீரகம் அறிக்கை
ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அபுதாபியில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அபுதாபியில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அபுதாபி வந்த அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினரை, மனிதாபிமான அடிப்படையில் அனுமதித்ததாக UAE விளக்கம் அளித்துள்ளது. தலிபான்கள், காபூலை கைப்பற்றியதும், அதிபராக இருந்த அஷ்ரப் கனி, தஜிகிஸ்தான் சென்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அபுதாபியில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.