அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் : தடுப்பூசி போட தயக்கம் - பாதிப்பு அதிகரிப்பு
அமெரிக்காவில் கொரோனா தொற்றுதல்கள் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகள் நிரம்ப தொடங்கியிருக்கின்றன.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 7.61 லட்சமாக அதிகரித்துள்ளது
கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு, இது தான் உச்சபட்ச
எண்ணிக்கையாக உள்ளது.
தொற்றுதல்கள் வெகுவாக அதிகரிக்க டெல்டா வைரஸ் தான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தொற்றுதலுக்குள்ளானவர்களில் பெரும்பான்மையினர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 49 சதவீதம் அதிகரித்துள்ளது.
மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள 35 பெரிய மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவிகளில் ஒரு படுக்கை கூட காலியாக இல்லாத நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய மூன்றாவது டோஸ் தடுப்பூசி அளிக்க வேண்டும் அமெரிக்க அதிபரின் மருத்துவத் துறை ஆலோசகர் டாக்டர் ஆன்டோனி பாசி கூறியுள்ளார்.
ஆனால் தடுப்பூசி எடுத்துக் கொள்வற்கு, ஏராளமான அமெரிக்கர்கள்
பல்வேறு காரணங்களினால் தயக்கம் காட்டுவதால், அங்கு தடுப்பூசி விநியோகம் மந்த கதியில் நடக்கிறது.
இதுவரை 50.7 சதவீதத்தினருக்கு மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.
அங்கு போதுமான தடுப்பூசிகள் இருந்தும், தடுப்பூசி மையங்களில் கூட்டம் இல்லை என்ற தகவல், தடுப்பூசி தட்டுப்பாட்டில் சிக்கியுள்ள நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.