ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் : 254 தலிபான்கள் கொல்லப்பட்டனர் - வெளியேறும் அமெரிக்க ராணுவம்

ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கும், தாலிபான் படையினருக்கும் நடந்து வரும் உக்கிரமான உள்நாட்டு போரில், ஒரே நாளில் 254 தாலிபான்கள் கொல்லப்பட்டனர்.

Update: 2021-08-03 09:15 GMT
2001இல் அமெரிக்காவில் இரட்டைப் கோபுரத் தாக்குதலுக்கு காரணமான அல் கொய்தா இயக்கத்தையும், அதற்கு ஆதரவளித்த தாலிபான்களையும் அழிக்க, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படை எடுத்தது.

20 ஆண்டுகள் கழித்து, ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைபற்ற தாலிபான் படையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்

தாலிபான் படையினர், ஆப்கன் ராணுவம், விமானத் தாக்குதலில் தகர்ந்த தாலிபான் தளம்

ஆப்கானிஸ்தானின் கிராமப்புற பகுதிகளில் பெரும்பான்மை மாவட்டங்களை தாலிபான் படையினர் கைபற்றியுள்ள நிலையில், கந்தஹர் நகரை முற்றுகையிட்டு, ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கந்தஹர் அருகே உள்ள தாலிபான்களின் ராணுவ தளம் ஒன்றின் மீது ஆப்கன் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஏராளமான தாலிபன்கள் கொல்லப்பட்டனர்.

ஞாயிறு அன்று ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில், 254 தாலிபான்
படையினர் கொல்லப்பட்டதாகவும், 97 பேர் காயமடைந்ததாகவும், ஆப்கான் அரசு கூறியுள்ளது.

தாலிபான்களுடன் நடந்த மோதல்களில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி முதல், 4,000 ஆப்கன் ராணுவத்தினர் 
உயிரிழந்துள்ளதாகவும், 7,000 பேர் காயமடைந்துள்ளதாகவும், 1,600 ராணுவத்தினர் தாலிபான்களிடம் பிடிபட்டுள்ளதாகவும் ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்