அஸ்ட்ரா ஜெனிகா விற்பனை 3 மடங்கு அதிகரிப்பு - மொத்தம் ரூ. 8,900 கோடிக்கு தடுப்பூசி விற்பனை
அஸ்ட்ரா ஜெனிகா கொரோனா தடுப்பூசி விற்பனை 2 ஆம் காலாண்டில் 3 மடங்கு அதிகரித்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அஸ்ட்ரா ஜெனிகா கொரோனா தடுப்பூசி விற்பனை 2 ஆம் காலாண்டில் 3 மடங்கு அதிகரித்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனிகா மருந்து நிறுவனம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி, உலகம் முழுவதும் 170 நாடுகள் மக்களுக்கு செலுத்த அனுமதித்துள்ளன.இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் என்ற பெயரில் இந்த தடுப்பூசியை தயாரித்து வழங்குகிறது. தேவை அதிகரிக்கும் நிலையில், 2-வது காலாண்டில் தடுப்பூசி விற்பனை 3 மடங்கு அதிகரித்து உள்ளதாக அஸ்ட்ரா ஜெனிகா மற்றும் சீரம் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.