ரஷ்யாவில் தடுப்பூசி செலுத்த தயங்கும் மக்கள் - தடுப்பூசி போடாவிட்டால் பணி தடை?
ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அனைத்து இடங்களிலும் பணி புரிய முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ரஷ்ய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அனைத்து இடங்களிலும் பணி புரிய முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ரஷ்ய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
14.6 கோடி மக்கள் தொகை கொண்ட ரஷ்யாவில் தற்போது வரை 10.7 சதவீததினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும், 13.8 சதவீதத்தினருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் ரஷ்யாவில் பல இடங்களில் பணியாற்ற தடைகள் ஏற்படலாம் என்று ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கொவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ, கிரெம்லின், திமித்ரி பெஸ்கோ, கொரோனா தடுப்பூசிகள், ரஷ்ய மக்கள்
தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது எதிர்காலத்தில் வெகுவாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
செவ்வாய் அன்று ரஷ்யாவில் 16,715 கொரோனா தொற்றுதல்கள் ஏற்பட்டன. நோய் தாக்குதலினால் 546 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள பலரும் தய்ங்குவதால், கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக ரஷ்ய அரசு சென்ற வாரம் கூறியிருந்தது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை ஊக்குவிக்க, பல்வேறு வகையான பரிசளிப்பு திட்டங்களை ரஷ்ய அரசு செயல்படுத்தி வருகிறது.