"தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பாதிப்பு" - உலக சுகாதார நிறுவன தலைவர் எச்சரிக்கை

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் எச்சரித்து உள்ளார்.

Update: 2021-06-08 09:31 GMT
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் எச்சரித்து உள்ளார். சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் பேசிய அவர், டெல்டா வகை உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாகவும், பல நாடுகளின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் கூறினார். அதிகளவு தடுப்பூசி செலுத்திய பிறகே தளர்வு நடவடிக்கைகளில் கவனமாக ஈடுபட வேண்டும் என்றும் அதோனோம் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்