பிரான்சில் மீண்டும் பரவும் கொரோனா : புதிய கட்டுப்பாடு - உணவகங்கள், பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு

பிரான்ஸ் நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டு வருகிறது.

Update: 2020-10-03 03:59 GMT
பிரான்ஸ் நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டு வருகிறது. தற்போது ஒரு லட்சம் பேருக்கு 250 பேருக்கு தொற்று பாதிப்பு என்ற அளவில் உள்ள நிலையில், உணவகங்கள், பார்களை இரவு 10 மணிக்குள் மூட உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அரசு தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலையில், தொழிலை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசின் நடவடிக்கையை கண்டித்து கையில் கருப்புப் பட்டை அணிந்தும், கரண்டிகளால் தட்டுகள், பாத்திரங்களில் அடித்து ஒலி எழுப்பியும் தங்கள் எதிர்ப்பை தொழிலாளர்கள் பதிவு செய்தனர். 
 

Tags:    

மேலும் செய்திகள்