கொரோனா தடுப்பூசி இலவசம் - ஆஸி. பிரதமர் அறிவிப்பு
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி அதனை சோதனை செய்து வருகிறது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி அதனை சோதனை செய்து வருகிறது. இந்த தடுப்பூசியை வரும் காலங்களில் ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் இரண்டரை கோடி மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிஸன் தெரிவித்துள்ளார்.
"கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டம்"
ரஷ்யா உருவாக்கியுள்ளதாக கூறப்படும் கொரோனா தடுப்பு மருந்தை, இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக, ரஷ்யன் டைரக்ட் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் என்ற நிதி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கிரில் திமித்ரீவ், தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனமே, கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்க முதலீடுகளை அளித்த நிறுவனமாகும்.