பொழுதே போகவில்லை - ஊரடங்கு அலப்பறைகள்
ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்த நேரத்தில் பொழுதைப் போக்குவதற்கு அவர்கள் புதுப்புது வழிகளையும் கண்டுபிடித்து வருகின்றனர்.
பூனையை கோல் கீப்பராக மாற்றிய கில்லாடி...
ஊரடங்கு காலத்தில் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் இந்த இளைஞர் ஒரு பூனையை கோல் கீப்பராக மாற்றியிருக்கிறார். இப்போது இந்தப் பூனையைத் தாண்டி இவரால் கூட ஒரு கோல் அடிக்க முடியவில்லையாம்.
லயன் கிங் போல நடித்துக் காட்டும் பூனைகள்
பூனையை கோல் கீப்பராக்குவது கூட கஷ்டமில்லை. லயன் கிங் படத்தில் கிராக்ஃபிக்ஸ் சிங்கங்கள் நடித்த காட்சி ஒன்றை பூனைகளை வைத்து உருவாக்குவது எவ்வளவு கஷ்டம். அதை செய்திருக்கிறார்கள்
டிக்டாக்கில் கலக்கும் ஜேம்ஸ்பாண்ட் பாட்டி
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் எம் என்ற கதாபாத்திரத்தில் கலக்கிய Judi Denchஐ நமக்குத் தெரியும். இவரும் இப்போது டிக்டாக்கில் இணைந்துவிட்டார். இவரும் இவரின் பேரன் சாம் வில்லியம்ஸும் இங்கிலாந்தில் வெவ்வேறு வீட்டில்தான் வசிக்கிறார்கள். ஆனாலும் ஒன்றாக எப்படி டிக்டாக் வீடியோ பண்ணுவது என உலகத்துக்கே இவர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள்.